தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான டாப் லெவல் மேனேஜ்மென்ட் மீட் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான டாப் லெவல் மேனேஜ்மென்ட் மீட் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார்.
தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரியில் “நிமிர்ந்து நில்” - திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான டாப் லெவல் மேனேஜ்மென்ட் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்து தென்காசி மாவட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர். மகேஷ் குற்றாலம் பேசினார். மேலும் ; நிமிர்ந்து நில்”- திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரிகளின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செந்தில் ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் முனைவர் எம்.புதிய பாஸ்கர், கன்னியாகுமரி மாவட்ட மேலாளர் ராஜேஷ், செந்தில் ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர். சேவியர் இருதயராஜ், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநர் கோபிநாத், மாவட்ட திட்ட மேலாளர் பலவேசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments