• Breaking News

    மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை

     


    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை. டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், நிர்வாக காரணங்களால் கடந்த 3 மாதங்களாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் விமான சேவை இருந்தது. தற்போது அந்த நிறுவனம் தினசரி விமான சேவையை இன்று (புதன்கிழமை) முதல் பயணிகளுக்கு வழங்க உள்ளது. அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அந்த விமானம் காலை 8.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும்.

    மீண்டும் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு டெல்லி சென்றடையும் என அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    No comments