சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 4-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தொடர்ந்து 7-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் அய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும். ஓணத்தையொட்டி, சபரிமலை சன்னிதானத்தில் பிரமாண்ட அத்தப்பூ கோலம் அமைக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment