• Breaking News

    நல்லகண்ணு உடல்நிலை முன்னேற்றம்...... விரைவில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்



     இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, "நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசித்து வருகிறார். வயதுமூப்பு காரணமாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் அவ்வப்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கிறோம். நல்லகண்ணு இயல்பு நிலைக்கு திரும்பியதும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றார்கள்.

    No comments