கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பொலவக்காளிபாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி ஊராட்சி ஒன்றியம், கடுக்காயம்பாளையம் ஊராட்சி, நாகதேவம்பாளையம் ஊராட்சி, நாதிபாளையம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதி பொது மக்களுக்காக பொலவக்காளி பாளையம் வேலாமஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் , கோபிசெட்டிபாளையம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் , திமுக நிர்வாகிகள் , பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments