• Breaking News

    அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்


    ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி,  அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்காக அந்தியூர் - அத்தாணி சாலையில் நகலூர் பிரிவு ஸ்ரீவாரி மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர்  கவியரசு , வட்டார வளர்ச்சி அலுவலர்  சக்தி கிருஷ்ணன் , அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  அமுதா , ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் , ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்  மணக்காடு சண்முகம்  , திமுக நிர்வாகிகள் , பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.






    No comments