தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைப்பு..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்;. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் நாளை (செப்.21) காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments