• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..... எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பங்கேற்பு......


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர், ஏனாதிமேல்பக்கம், குருவாட்ச்சேரி ஆகிய ஊராட்சிகளில்   உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

     இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் .எஸ். கே. ரமேஷ் ராஜ்  கலந்துகொண்டு பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு துறை சார்ந்த அரசுத்துறை அதிகாரிகளை  உரிய தீர்வு காண அறிவுறுத்தினார்.

     இதில்  ஒன்றிய செயலாளர் மணிபாலன்.கி.வே ஆனந்தகுமார் மாவட்ட அவைத்தலைவர் பகலவன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் கேசவன் மு கவுன்சிலர் ஜோதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்த்தமன்னன்,சந்திரசேகர் மற்றும் கருணாகரன் கோபி ராகுல் கல்வி செல்வம் பழனி. மஸ்தான்   ஊராட்சி செயலாளர்கள் குருமூர்த்தி, திருமலை, வேத நாராயணன்   உள்ளிட்ட  அரசு துரை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    No comments