• Breaking News

    மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக கிளைக் கழக செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம்..... மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ் பங்கேற்பு


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் அடங்கிய திமுக கிளை கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகளின் ஆய்வுக்கூட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார் மடம் புயல் பாதுகாப்பு மையம்  மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவை தலைவர் மு.பகலவன், வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய பொறுப்பாளர் மு முரளிதரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் செல்வராஜ் கலந்துகொண்டு நிர்வாகிகளின் மத்தியில் கலந்துரையாடி கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை குறித்து விளக்கமாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் எடுத்து கூறினார்.

     கழகத்தின் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், கிராமங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார். கிளைக் கழக செயலாளர்கள் கழகத்தில் இதுவரை செய்திருந்த பணிகளையும் மற்றும் மினிட் நோட்டுகளை ஆய்வு செய்தார். இதில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து.தமிழரசன், அலவி அசோகன் தமிஷ்ஷா ரவி அன்பு தொண்டர அணி அமைப்பாளர் என் நாராயணன். ஜெகன் சங்கீதாஸ் உள்ளிட்ட திரளான திமுக கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments