மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதில் சதி வேலை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. துயர நிகழ்வில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் திமுக அரசையும், முதலமைச்சரையும் பொறுப்பாக்க முயல்கின்றனர். தவெகவினரின் குற்றச்சாட்டுகள் தவறாவவை.
தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிபிஐ வந்தால் மட்டும் நடுநிலையான தீர்ப்பை கொடுத்து விடுவார்களா? எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை கிடையாது.”
இவ்வாறு அவர் பேசினார்.


0 Comments