• Breaking News

    தென்காசியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி..... மாணவ,மாணவியர் பங்கேற்பு


    தென்காசியில் நடைபெற்ற நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவியர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான நான் முதல்வன் உயர்வுக்குப்படி நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் 99 மாணவ,  மாணவியர்கள் கலந்து கொண்டதில் 37 பேருக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை படிவத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) கோபிநாத், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  ராமசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    No comments