அதிமுக திண்ணை பிரச்சார பயிற்சி முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செகண்யம், தேவம்பட்டு, பெரியகரும்பூர், மங்கோடு உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கான பயிற்சி முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தலைமையில் தோவம்பட்டில் நடைபெற்றது.
இதில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் பூத் கமிட்டி பொறுப்பாளருமான வினோத் குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் உதயகுமார் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட மீனராணி செயலாளர் மோகன் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மீஞ்சூர் மாரி குமரஞ்சேரி எல் குமார் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments