சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மற்றும் பொதுக்குழு அறிக்கை
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஆனை கொம்பு அரங்கத்தில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மற்றும் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. இத்தேர்தலில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ் .என்.ஜவஹர் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ்.ஏ.சேவியர் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க பொருளாளர் எஸ் .ஏ.ஜாகிர் உசேன் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க துணைத் தலைவர் ச.கி.நாகராஜ் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க துணைச் செயலாளர் எஸ்.ராம்குமார் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க துணைத் தலைவர்கள் தனசேகர், கி.சசிகுமார் , துணைச் செயலாளர்கள் சீனிவாசன், சதீஷ்குமார், கமலக்கண்ணன், ராஜா மாதவன், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சத்தி–1 பகுதி 24 பேர், சத்தி–2 பகுதி 22 பேர் , தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர். துணைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இணைப்பு சங்க நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.சங்கத் தலைவர் எஸ் என்.ஜவகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.செயலாளர் எஸ்.ஏ.சேவியர் அறிக்கையும் பொருளாளர் எஸ் .ஏ.ஜாகிர் உசேன் வரவு , செலவு அறிக்கையும் வாசித்தார்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளளுக்கு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்போன் சங்க நிர்வாகிகள் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்துடன் இணைந்ததை வரவேற்று, சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
செயலாளர் தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றியும் , வாழ்த்தும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானம் 1).கூட்டங்களுக்கு உறுப்பினர் பங்கேற்பை அதிகரித்தல்,
2). உடல் உறுப்பு தானம் மற்றும் இரத்த தானத்தை ஊக்குவித்தல் ,
3). நலவாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு அரசு நலன்களை பெறசெய்வது,
4). உறுப்பினர்களின் உடல் நலம் மற்றும் கல்விக்கான உதவிகள் வழங்குதல்,
5). குடும்ப உணர்வுடன் சங்கத்தை வழிநடத்துவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக துணை செயலாளர் எம்.ராஜா மாதவன் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments