நாகை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரம்..... தேங்காய் உடைத்து , சூடம் ஏற்றி சூரிய பகவானை வழிபட்டு நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்ட விவசாயிகள்......
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். தற்போது குறுவை சாகுபடிக்கான காலநிலை முடிவுற்றதால் தற்போது சம்பா சாகுபடி பணிக்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காக்கழனி கிராமத்தில் விவசாயிகள் சம்பா நெற் சாகுபடி பணிகளை மேற்க்கொண்டனர். நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்ட விவசாயிகள் நெல் விதைகளை வாழை இலையில் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி இயற்கை மற்றும் சூரிய பகவானை வழிப்பட்டு விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களை காப்பற்றவும் அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
தொடர்ந்து விதை நெல்லை வயலில் தெளித்தனர். தற்போது சம்பா சாகுபடி தொடங்கி உள்ளதால் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே தூர்வாரப்படாத பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கல்களை உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments