முன்னாள் எம்.பி சத்யபாமாவின் கட்சி பதவி பறிப்பு..... எடப்பாடி உத்தரவு.....
அதிமுக கட்சியில் விலகி சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இரண்டு நாட்களில் அதிமுகவிலிருந்து விலகி ராஜினாமா செய்த நிலையில் முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் முன்னால் எம்.பி சத்தியபாமாவை கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் செங்கோட்டையனிடம் வழங்கிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
No comments