தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை இழுத்து மூடுகிறார் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி.?
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி, தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். மும்பை பாந்த்ராவில் இவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கணவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை இழுத்து மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதனை ஷில்பா ஷெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “எனது நட்சத்திர ஓட்டலை மூடப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது, அதேவேளை சிரிப்பாகவும் வருகிறது.
இந்த தகவலில் எந்த உண்மையையும் கிடையாது. நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக தென்னிந்திய உணவுகள் சுடச்சுட கிடைக்கும் வகையில் புதிய உணவகத்தை திறக்க முடிவு செய்து இருக்கிறோம். மேலும் எனது ஓட்டலின் புதிய கிளை ஜுகு பகுதியில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். இப்படி தொழிலின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் எங்களிடம் இப்படி கேட்கலாமா?, என்று செல்லமாக கோபிக்கிறார்” ஷில்பா ஷெட்டி.
No comments