சென்னை டிஜிபி அலுவலகம் முன்பாக ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய விசிகவினர்..... வேடிக்கை பார்த்த காவல்துறை
புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் தாக்கிய அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.சென்னை காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், போலீசார் முன்னிலையையே, செய்தியாளர்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிந்தே தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என ஏர்போர்ட் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
No comments