செங்கோட்டையனுடன் இருந்த சத்யபாமா பதவி நீக்கம் இல்லை..... பின்னணி என்ன.?
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை எடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் செயல்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், செங்கோட்டையனின் ஈரோடு மாவட்ட ஆதரவாளர்களான ஏழு பேரின் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் ஆகியோரின் கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஈரோடு மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நீக்கப்பட்ட பட்டியலில் செங்கோட்டையனுடன் இருப்பவர்களில் முன்னாள் எம்பி சத்யபாமாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று (செப். 5) செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் அவர் அருகில் அமர்ந்திருந்ததோடு, இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் அவருடன் இணைந்து இருந்தார். அதேசமயம், பொறுப்பில் இருந்து நீக்கப்படாமல் தப்பியிருப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சத்யபாமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, EPS-ன் உள்திட்டத்தில் அரசியல் கணக்கீடுகள் உள்ளனவா என வட்டாரத்தில் பேசப்படுகிறது.
No comments