நாகை: ஏடிஜேடி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில், நாகப்பட்டினம் ஏடிஜேடி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து, நேற்று  ( 26.09.25 ) மாலை பாலிடெக்னிக் முன்பு வட்டத் தலைவர் வே.சித்திரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் கே.இரவிச்சந்திரன் விளக்கவுரையாற்றினார். 

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி.குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கா.இராஜூ, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பாலாம்பாள், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். 

ஏடிஜேடி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் கடந்த இரண்டு மாதமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததையும், ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தராததையும், நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீர்கேட்டிற்கு காரணமான முதல்வர் செந்தில்குமார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததையும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவித பங்குத்தொகையை செலுத்தாதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இறுதியாக வட்டப் பொருளாளர் பி.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

மக்கள் நேரம் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழங்க நினைத்தால் இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments