நாகப்பட்டினம் நகராட்சிக்கு 15 வது வார்டு பிள்ளையார் கோயில் தெருவில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் கடந்த மாதம் சுமார் 700 மீட்டர் தொலைவிற்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தார் சாலையின் தரம் குறைவாக உள்ளதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து வருவதாகவும் இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி ஐந்துக்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றன எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



0 Comments