திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூரில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட,ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வல்லூர்.மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மதுரை ராசா கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர் அணியின் பங்கு குறித்தும், இளைஞரணி சார்பில் நடைபெற இருக்கின்ற மண்டல மாநாட்டிற்கு முன் தயாரிப்பு பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.இதில் மாநில,மாவட்ட திமுக நிர்வாகிகள் எல்லாபுரம் மூர்த்தி,ஆரணி அன்புவாணன்,கதிரவன்,கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,மாதர்பாக்கம் குணசேகரன்,பா.து.தமிழரசன்,பழவை முகம்மது அலவி ஒன்றிய,நகர்,பேரூர் நிர்வாகிகள் செல்வ சேகரன்,ஜெகதீசன்,ராஜா,உதயசூரியன்,முரளிதரன், வே.ஆனந்தகுமார்,தமிழ் உதயன்,ரவிக்குமார் ஆரணி முத்து.இளைஞர் அணி நிர்வாகிகள் கதிரவன்,.மா.தீபன்,கஜேந்திரன்,மெதூர் சிலம்பரசன் ஸ்டான்லி யுவராஜ் வழக்கறிஞர்கள் பல்லவன்,சிற்றரசு,ஜெகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.



0 Comments