நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் ஊராட்சியில் சிறப்பு சுகாதாரம் மற்றும் கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.ஈஸ்வரன் அறிவுரையின் பேரில் உதவி இயக்குனர் மரு.கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முகாமில் கால்நடை உதவி மருத்துவர் சி.லாரன்ஸ் தலைமை தாங்கினார். முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை நடைப்பெற்றது.
பசு மற்றும், எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் சினை பரிசோதனை மலடு நீக்கம் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.முகாமில் 400 க்கும் மேற்பட்ட கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர் முகமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு சிறந்த பரிசுகள் வழங்கபட்டது. இதில் கால்நடை ஆய்வாளர்கள் . கலைவாணி. லலிதா. கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரியதர்ஷினி மற்றும் அழகர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி



0 Comments