நாகையில் மாவட்ட அளவில் மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது

 


 நாகப்பட்டினம் மாவட்ட முகமை ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கில்  மகளிர் திட்ட பணியாளருக்கு மனம் நலம்  குறித்த  ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் /இணை இயக்குனர் சித்ரா தலைமையில்  நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன்,சண்முகவடிவு,சந்திரசேகரன் மற்றும் அறிவழகன் முன்னலையில் பயிற்சி நடைபெற்றது.இதில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்  மனநலம்,மனநோய், மனநல கோளாறுகள்,தீவிர மனநல கோளாறுகள்,தற்கொலை மற்றும் தடுப்பு.போதைப் பொருட்கள் பயன்பாடு,அறிவுசார் இயலாமை,குழந்தை பருவ கோளாறுகள்,மறதி நோய்,மனநல அவசர பதில்,ஆலோசனை திறன்கள்,கட்டுக் கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள்,சமூக மனநலம்,மாவட்ட மனநல திட்டம்,மனநல சட்டம்,விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் பயிற்சி வழங்குதல், திட்டத்தை செயல்படுத்துதல், முதியோர்களுக்கான சமூக அடிப்படையிலான மனநல  இடையீடுகள் மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது.

 இதில் நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு மற்றும் வேதாரணியம் திட்ட பணியாளர்கள் மற்றும் வட்டார வள பயிற்றுக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி



Post a Comment

0 Comments