தமிழகம் முழுதும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்தநிலையில், ஈரோடு மாவட்டத்தில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் ரோடு ஷோ' சென்று, கேப்டன் ரத யாத்திரை வேன் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.
இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரசாரத்திற்கு ஈரோடு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் 'ரோடு ஷோ'வில், 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில், 'ரோடு ஷோ' மற்றும் வேன் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கிருஷ்ணகிரியில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின், 'ரோடு ஷோ'வுக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments