ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது


ஆலங்குளத்தில்  நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 50வது நினைவு தினம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் 121 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. எஸ் எஸ் ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜர், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் ஆலடி சங்கரய்யா முன்னிலை வகித்தனர்,  முன்னாள் தென்காகி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து காந்தியடிகள் மற்றும் லால்  பகதூர் சாஸ்திரி உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பால்ராஜ், பாப்பாக்குடி வட்டார தலைவர் தினகரன் ,ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் பிரிவு கருப்பசித்தன் , நகரப் பொருளாளர் ஐசக் இமானுவேல், பொன்னுச்சாமி, துரைப்பாண்டி, செல்வராஜ், மாசிலாமணி, பொன்னுத்துரை,அர்ஜுனன், பிரதாப், ராமசாமி, வேலாயுதம் மாடசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்க செல்வம், மோகன்லால்,அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

nமேலும் ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினராக சேர்ந்த சொரிமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நகரத் துணைத் தலைவர் லிவிங்ஸ்டன் விமல் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments