நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது மாவட்டம் முழுவதும் சுமார் 2லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும் திறமையற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால் தான் தேக்கம் ஏற்பட்டதாகவும் மாவட்ட முழுவதும் அறுவடை பணிகள்நடந்து வரும் நிலையில் ஓரிரு நாளில்மிகப்பெரிய அளவில் தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுவாக 5 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குருவை சாகுபடி நடைபெறும் நடப்பாண்டு மேட்டூர் அணை ஜூன் 12 த் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது இதன் மூலம் சுமார் இரண்டரை லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டி இருந்த நிலையில் முறையான திட்டமிடல் மற்றும் கட்டமைப்புகளை வலுப்படுத்தாத மாவட்ட நிர்வாகம் மற்றும் திறமை அற்ற அலுவலர்களால் தான் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் நெல் தேக்க மடைந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த தொடர் கனமழையில் நெல் முட்டைகள் நனைந்து முளைக்கத் தொடங்கியது மேலும் புதிதாக கொள்முதல் செய்வதிலும் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தில் நடந்த நெல் கொள்முதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்சமயம் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் மற்றும் கிடங்குக்கு அனுப்பும் பணி குறித்த விவரங்களை தினம் வெளியிட்டு வருகிறது ஆனாலும் தற்சமயம் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமார் 2 லட்சம் நெல் மூட்டைகள் திறந்த வெளியிலும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு கிடக்கிறது என்றும் புதிதாக கொள்முதல் செய்ய வசதி இல்லாததால் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள் சாலைகளில் கொட்டி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர் அறிக்கையின் படி சுமார் 17,000 ஏக்கரில் ஏக்கரில் குருவை அறுவடை பணிகள்ஒரே நேரத்தில் தற்சமயம் நடந்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அறுவடை பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்திருக்கும் நெல் கொள்முதலுக்காக காத்திருக்கும் நெல் மூட்டைகள் இதற்கு இடையே புதிதாக அறுவடை முடிந்து ஓரிரு நாளில் கொள்முதல் நிலையத்திற்கு வரவுள்ள நெல் என கொள்முதல் பணி மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்தில் காட்டிய அலட்சியத்தை இப்போதும் காட்டாமல் மீண்டும் மழை தொடங்குவதற்குள் கொள்முதல் பணியை முடித்து அரவைக்கோ அல்லது கிடங்கி இருக்கோ அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments