கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு ஜாமின்

 


கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனிப்படை போலீஸார் செப்.29-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பவுன்ராஜும் கைது செய்யப்பட்டார். விடிய, விடிய விசாரணை நடத்திய போலீஸார் செப்.30-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரது நீதிமன்றக் காவலும் முடிந்த நிலையில், காவலை நீட்டிக்க முடியாது எனக்கூறி ஜாமீனில் விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments