கன்னியாகுமரி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து

 


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே இன்று கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொட்டிப்பாலம் அருகே காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது கால்வாய்க்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் காயமடைந்தார்.

தடுப்புச்சுவர் இல்லாத பகுதியில் பார்க்கிங் செய்திருந்த நிலையில் காரை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக பின்னோக்கி சென்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, காயமடைந்த கார் டிரைவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments