பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உக்கிரப்பாண்டி தேவர்இந்திராணி தம்பதியினருக்கு மகனாக 30.10.1908 அன்று பிறந்தார். தனது சிறு வயது முதல் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தனது வாழ்நாளில் இறுதிவரை பின்பற்றினார். அரசியலிலும், ஆன்மிகத்திலும் பெருமைக்குரியவராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 30.10.1963 அன்று மறைந்தார்.
அவருடையை புகழை போற்றும் வகையில் வருடம் தோறும் தேவரின் குருபூஜை விழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.அனைத்து கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவரை வரவேற்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுத்து அசத்தினர். திமுக நிர்வாகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளும் மக்களின் வரிப்பணத்தில் நாளிதழில் விளம்பரம் வெளியிட்டு அனைவரையும் தினரடித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி,பசும்பொன்,கடலாடி,கமுதி,முதுகுளத்தூர் போன்ற ஒன்றியங்களில் முதலமைச்சரை வரவேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளனர். பொதுவாக முதலமைச்சர் அரசுமுறை பயணமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போதும் அந்த மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் அடிக்கல்,முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்களுக்கு அர்பணிக்கும் போது அந்த திட்டத்தின் பெயர்,மதிப்பு போன்றவற்றை மக்கள் தெரிந்து கொள்வதற்காக. அந்ததந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நாளிதழில் வெளியிடுவது வழக்கம். ஆனால் முதலமைச்சரை வரவேற்று அரசு அதிகாரிகள் வெளியிடுவது புதிதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த செல்லும் போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு நிர்வாகம் சார்பில் இனி இது போன்ற வரவேற்பு விளம்பரங்கள் நாளிதழில் வெளியிடப்படுமா என கேள்வியும் எழுப்புகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகளை வருக வருக என வரவேற்றுள்ளனர். திமுக அரசு விளம்பர மாடல் அரசு என்பதற்கு இந்த விளம்பரங்களும் ஒரு சாட்சி என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வெளியிட்ட இந்த விளம்பரங்களில் பொதுமக்கள் வருக என குறிப்பிடவில்லை. இது போன்ற மக்களின் வரி பணத்தில் வெளியிடப்படும் வரவேற்பு அரசு விளம்பரங்களால் மக்களுக்கு என்ன பயன்.?




0 Comments