புதுவாயில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை நிறைவடைந்து அம்மனுக்கு கட்டில் படையலுடன் திருவீதி உலா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று   கடந்த செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது மண்டல பூஜை நிறைவு நாளான இன்று புதுவாயில் கிராமத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து தாய் வீடான புதுவாயில் கிராமத்திற்குச் சென்று அங்கு அப்பகுதி மக்கள் கட்டில் படையாலிட்டு வழிபட்டனர் பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆடல் பாடலுடன் திரு வீதி உலா நடைபெற்றது  இதில் புதுவாயில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சதீஷ், பிரபாகரன் ,கார்த்தி, இளவரசன் , சரவணன், துரைராஜ், ராஜேந்திரன், தமிழரசன், விஜய், செல்வம், ராஜேஷ் ,ரஞ்சித், புருஷோத்தமன் பிரபா கோபி சிவகுமார் முரளி விஜயகாந்த் ஜெயகாந்த் பழனி லோகநாதன் ரவிச்சந்திரன் சாந்தகுமார் சேகர் ரமேஷ் ரஞ்சித் ஆனந்தன் சாமிதுரை ரமேஷ். பாலு சீனு விஷால் தாஸ் பி.டி.ஓ. ராஜேந்திரன் உள்ளிட்ட கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments