தேனி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,      முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று பதக்கம் மற்றும் பரிசுத்தொகை பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஞ்ஜீத் சிங் பாராட்டி வாழ்த்துகளை  தெரிவித்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்   நடத்தப்பட்டு வருகின்றது.2025-2026 ஆம் ஆண்டிற்கான  முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான போட்டிகள்  26.08.2025  முதல் 10.09.2025 வரை 5 பிரிவுகளில்  நடத்தப்பட்டது.  

இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள்  மாநில அளவில் 02.10.2025 முதல்  14.10.2025 வரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கான குண்டுஎரிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், வட்டு எரிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில்     1 வெண்கல பதக்கமும்,  சிலம்பம் போட்டியில் பெண்கள் பிரிவில் 1 தங்க பதக்கமும், ஆண்கள் பிரிவில் 3 வெள்ளி பதக்கங்களும், நீச்சல் போட்டியில்  பெண்கள் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களும், கூடைப்பந்து போட்டியில்  ஆண்கள் பிரிவில் 1 வெண்கல பதக்கமும், கபாடி போட்டியில் 1 வெள்ளி பதக்கமும்,  சதுரங்க போட்டியில் பெண்கள் பிரிவில் 1 வெண்கல பதக்கமும், மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 1 வெண்கல பதக்கமும்,  ஜூடோ போட்டியில் ஆண்கள் பிரிவில் 1 தங்கப்பதக்கமும், 1 வெள்ளி பதக்கமும், 1 வெண்கல பதக்கமும்,   கல்லூரி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில்  ஆண்கள் பிரிவில்                               2 வெள்ளி பதக்கங்களும்,  மேசைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் 1 வெள்ளி பதக்கமும், ஆண்கள் பிரிவில் 1 வெண்கல பதக்கமும், ஜூடோ போட்டியில்  ஆண்கள் பிரிவில் 1 வெள்ளி பதக்கமும், மாற்றுத்திறனாளிகளுக்கான 100மீ ஓட்டப்போட்டியில் பெண்கள் பிரிவில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கமும், குண்டு எரிதல் போட்டியில்  ஆண்கள் பிரிவில் 1  தங்க பதக்கமும்,   கபாடி போட்டியில் 1 வெள்ளி பதக்கமும், கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 1 தங்கமும் என மொத்தம் 5 தங்கப்பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள் என 25 பதக்கங்களை  பெற்றுள்ளார்கள். 

மேலும்,  தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு  ரூ.1,00,000/- இரண்டாம்  பரிசு ரூ. 75,000/- மூன்றாம்  பரிசு ரூ. 50,000/-  குழு போட்டிகளுக்கு முதல்  பரிசு  ரூ.75,000/- இரண்டாம்  பரிசு ரூ. 50,000/- மூன்றாம் பரிசு ரூ.25,000/- என தேனி மாவட்டம் மொத்தமாக ரூ.17,50,000/- பரித்தொகை பெற்றுள்ளது.

தேனி மாவட்டம் மாநில அளவிலான பதக்கப்பட்டியலில் 16-ஆவது இடம் பிடித்து, தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை முன்னிட்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பாராட்டி, மேலும் பல வெற்றிகளை பெற   வாழ்த்துகளை தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், விளையாட்டு பயிற்றுநர்கள் உள்ளிட்ட  பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments