சட்டசபையில் பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி..... அமைச்சர் ரகுபதி விமர்சனம்

 


சென்னையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைக்கு சட்டசபையில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். எதிலாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருச்சியில் மக்கள் மயக்கமடைந்தார்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. நாமக்கல்லில் அன்றைக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். தவெக பிரச்சாரம் நடந்த இடங்களில் எல்லாம் கூட்ட நெரிசலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதிப்பு எப்படி நடந்தது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த அரசியல் கட்சி தலைவரும் கூட்டத்துக்கோ, ரோடு ஷோவுக்கோ போனால் 500 மீட்டர் தொலைவுக்கு முன்பே வேனில் எழுந்து நின்று கையைசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், விஜய் வரும்போது உள்ளேயே உட்கார்ந்து கொண்டார். அதன்பிறகு லைட்டையும் அணைத்து விட்டார்கள். சினிமா போல லைட்டை போட்டு அணைத்து காட்டினார்கள்.

அதனால் மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க முடியாமல் முண்டியடுத்து வந்தார்கள். அதில் மூச்சுத்திணறித்தான் இறந்துள்ளனர். வேண்டுமென்றே செய்த செயலால் பலர் இறந்துள்ளனர். இரவில் துரிதமாக அரசு எடுத்த நடவடிக்கையால் தான் பல பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய முதலமைச்சரின் சாதனை துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments