![]() |
| File Image |
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமியானது நேற்று தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலைக்கு வந்த அதிக அளவு பக்தர்கள், நேற்று கிரிவலம் சென்றனர். அவ்வாறு நேற்று இரவு முழுவதும் கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் காத்திருந்தனர்.
குறிப்பாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தின் நடைமேடை முழுவதும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்திலும் இந்த சூழல் நிலவுவதால் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

0 Comments