நாகை: திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு பேரணி


கீழையூர் ஒன்றியம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில் புகையிலை தீமைகள் குறித்த புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் வினோத்கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெய்குமாரி பேரணியை துவங்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.பள்ளி உதவி தலைமையாசிரியர் கே.சரவணன் வரவேற்றார்.

சுகாதார ஆய்வாளர்கள் கௌதம், அருண்மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழு  பள்ளியில்      மாணவ மாணவிகளுக்கு புகையிலை தீமைகள் குறித்த புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் பேரணி நடைபெற்றது.மாணவ மாணவிகள் புகையிலைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு புகையிலைக்கு  எதிராக விழிப்புணர்வு பதாகையுடன் புகையிலைக்கு எதிராக  கோஷமிட்டு முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

இதே போன்று கீழையூர் வட்டாரத்தில் சிந்தாமணி அரசு  பள்ளியில் புகையிலைக்கு  எதிரான விழிப்புணர்வு பேரணி  பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.பேரணியில்  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 

Post a Comment

0 Comments