பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. சட்டசபை நடவடிக்கையில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments