திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிளையூர் காளி கோயில் செல்லும் வழியில் பெய்த கனமழையால் சாலை ஓரமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளத. அது வழியாக பக்தர்கள் செல்வதற்கும் பிறகு தரிசனம் முடித்து வருகின்ற பக்தர்களுக்கும் வழிகள் இல்லாமல் போக்குவரத்து நெருசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றார்கள் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் செங்கத்திலிருந்து கிளையூர் செல்லும் சாலை அகலப்படுத்துமாறு ஓட்டுனர்களும் பக்தர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments