நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கிளை நூலக பயன்பாட்டிற்கு கணினி பிரிண்டர் வழங்கும் நிகழ்வு வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் நடைபெற்றது. செருதூர் கிளை நூலகர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். வேளாங்கண்ணி கிளை நூலகர் தனசேகரன் முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட நூலக அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் ரூபாய் 15,000 மதிப்புடைய கணினி பிரிண்டரை நன்கொடையாக வேதாரண்யம் கிளை நூலகர் அருள்மொழி வழங்கி சிறப்புரை ஆற்றும் போது " புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதநேயத்துடன் சமூகத்தில் வாழ வைக்கும் என்பதை உணர்ந்து தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
குறிப்பாக மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள், இலக்கிய திருவிழாக்கள் என அடுத்த தலைமுறை புத்தக வாசிப்புடன் கூடிய சிறந்த தலைமுறையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வரும் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வேதாரண்யம் கிளை நூலகத்திற்கு என்னால் இயன்றவரை உதவிட கணினி பிரிண்டர் ஒன்றை இன்று நன்கொடையாக வழங்கினேன். இதுபோன்று ஒவ்வொரு நூலகங்களுக்கும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள நன்கொடையாளர்கள் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் நூலகங்கள் வளர்ந்தால் சமூகம் சிறக்கும். இலக்கியம் படித்த மனிதன் மாமனிதன் ஆகிறான் என்று முன்னோர் சொல் உண்மையாகும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பிvu சரவணன் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் முருக பூபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்

0 Comments