திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தனது 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 500 ஏழை எளியோருக்கு மதிய உணவாக சிக்கன் வறுவலுடன் கூடிய சிக்கன் பிரியாணியும்,பழ ரசங்களும்,வேட்டி,சேலைகளும் வழங்கினார்.மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில நிர்வாகி வெங்கடேசன்,மாநிலத் தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஷ் குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் மீஞ்சூர் மேற்கு தலைவர் பா.வருண் காந்தி,மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் சந்துரு, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள்,தொகுதியின் இணை அமைப்பாளர் மாலதி,மீனவரணி முத்து உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.



0 Comments