சிறுவாபுரி பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் 70வயது பூர்த்தி அடைந்த 6 மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது



2025 -26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில்,“இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்” என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம்,பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணியர் திருக்கோவிலில் 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம் தலைமை தாங்கினார். திருக்கோவில் செயல் அலுவலர் மாதவன் முன்னிலை வகித்தார். இதில் அழைப்பாளர்களாக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு 6 மூத்த தம்பதியர்களுக்கு 2,500 மதிப்பிலான வேட்டி,சட்டை, புடவை,இரவிக்கை, பழவகைகள், மஞ்சள்,குங்குமம், கண்ணாடி வளையல்,உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கினர்.

இதில் கும்மிடிப்பூண்டி தேர்தல் பார்வையாளர் கவி.கணேசன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன்,ஒன்றிய செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி, ஆனந்தகுமார்,  முரளிதரன்,ராஜா,  அறங்காவலர். குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன்.எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் டி.கே.முனிவேல், சிறுவாபுரி ரமேஷ், பொன்னேரி தீபன்,முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர், பிரபு. பெரியபாளையம் கார்த்திக்,மற்றும் கோவில் ஊழியர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments