அரியலூர் மாவட்டம், வரணவாசிக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோரச் சம்பவத்தினால் அடுத்தடுத்து சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், தீயின் ஜுவாலைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானுயர எழுந்தன.
இதனால், பெரும் விபரீதம் நேரிடும் என்ற அச்சத்தில் அருகில் குடியிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.இந்தத் துயரச் சம்பவத்தில் லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானதுடன், இந்த வெடிவிபத்தின் பின்னணியில் உள்ள சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments