திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பயிற்சி விமானம் திடீரென தரையிறங்கியது ஏன்..? முழு விபரம்.....

 


புதுக்கோட்டை அருகே சிறிய பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் இறக்கை உடைந்ததன் காரணமாகவும் எரிபொருள் லீக் ஆனதன் காரணமாகவும் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானத்தை பைலட் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இறக்கை எவ்வாறு உடைந்தது பெட்ரோல் எதனால் லீக்கானது மலை மேல் எதுவும் மோதியதா என்பது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சி ஐ எஸ் எப் காவல்துறையினர் விசாரணை.

இன்று மதியம் ஒரு மணி அளவில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அம்மா சத்திரம் அருகே ஒரு சிறிய பயிற்சி விமானம் திடீரென்று பயங்கர சத்தத்துடன் தரை இறங்கியது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அந்த போதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையில் மற்றும் தீயணைப்பு துறையினர் முதலில் சிறிய ரக பயிற்சி விமானத்தில் இருந்த பைலட் மற்றும் பயிற்சி நேர் கொண்டவர் ஆகியோரை பாதுகாப்பாக இறக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

மேலும் இதனை தொடர்ந்து அவர்கள் செய்த விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த விமான பயிற்சி பள்ளி சார்பில் விமான ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுவதாகவும் இன்று அதே போன்று சிறிய ரக பயிற்சி விமானத்தில் பைலட் மற்றும் பயிற்சி பெறுபவர் ஆகியோர் சேலத்தில் இருந்து காலை கிளம்பி சேலம் காரைக்குடி திருச்சி வான்வெளியில் பயிற்சி மேற்கொண்ட போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து பாதுகாப்பாக விமானத்தை தர இயக்குவதற்கு பைலட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் இதற்கிடையில் திடீரென்று மகிழ்ச்சியுமானத்தில் முன்பக்க இறக்கை உடைந்ததாகவும் கூறப்படுகிறது மேலும்   எரிபொருள் கீழே சொட்டி கொண்டிருந்ததாக தெரியவந்தது இதனை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அரன்களை ஏற்படுத்தினர் அந்த சம்பவ இடத்தை சுற்றி பொதுமக்கள் யாரும் செல்லாத அளவிற்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜு தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொண்டனர்.பைலட்டு மட்டும் பயிற்சி பெறுபவர் ராபர்ட் மற்றும் ஹாசிம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல்வேறு தகவல்களை அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர் மேலும் அந்த பகுதியைச் சுற்றி மலை பகுதிகள் அதிகமாக இருந்ததால் விமானம் கடந்த போது தவறுதலாக மலை மேல் மோதி இறக்கை உடைந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பல கட்ட சோதனைகளை மேற்கொண்ட திருச்சி விமான நிலைய அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர் இன்று மாலை 5 மணிக்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்  ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஆய்வில் தான் எதனால் இறக்கை உடைந்தது மலை மேல் எதுவும் விமான மோதியதா அல்லது தொழில் நுட்ப கோளாறால் இது நடந்ததா என்பது குறித்து தெரியவரும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த சிறிய ரக விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியிலும் பயிற்சி  பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய துறை அதிகாரிகள் சி ஐ எஸ் எப் போலீசார் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான பைலட்டில் சாதுரியமான முயற்சியால் பெரும் விபத்து தவிக்கப்பட்டதாக திருச்சி விமான துறை இயக்குனர் ராஜு செய்தியாளரிடம் தெரிவித்தார் மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை முடிந்த பிறகு முழு விவரம் தெரிவிப்பதாகும் அவர் தெரிவித்தார்.

விமான பைலட் பயிற்சி கொடுப்பதற்கு சட்டப்படி அந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது என்றும் தற்போது அந்த உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாலை பாதுகாப்பு அதிகாரிகள் வரும்போது அவர்கள் சோதனை செய்து தெரிவிப்பார்கள்.

அவசரமாக தரை இறங்குவதற்கு சிறியளக பயிற்சி விமானத்தில் பைலட் திருச்சி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டதாகவும் அவர்கள் அனுமதி அளித்ததின் பேரிலேயே அவசர காலத்தில் இதுபோன்று தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கலாம் என்று சட்டத்தில் இடம் உள்ளதால் திருச்சி விமான நிலையத் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்குவதற்கு அனுமதி அளித்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

விமான நிலையம் தரையிறங்கியவுடன் விமானம் ஆப் ஆகிவிட்டது சாலை நடுவே விமான நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள நபர்கள் மற்றும் பைலட் ஆகியோர் விமானத்தை சிறிது தூரம் கையாலே தள்ளி சாலையின் ஓரத்தில் விமானத்தை கொண்டு வந்து நிறுத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

Post a Comment

0 Comments