தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 


சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிச.6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் அதற்கு அடிப்படை தூய்மை தான். எந்த பேரிடரை எதிர்கொண்டாலும் அதில் இருந்து இந்த மாநிலம் மீண்டுவருவதில் உங்கள் பணி தான் இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால் தான் சுற்றுபுரம் சுத்தமாக இருக்கிறது.

நான் சென்னை மாநகருக்கு மேயராக இருந்த போது களைஞர் இது பதவி அல்ல பொறுப்பு என்று சொன்னார். அதேபோல் நான் உங்களுக்கு சொல்றேன் நீங்கள் செய்வது வேலை ஆல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகு ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள் தான்.

இந்த மாநகரமே உங்களின் சேவையை பார்த்து நன்று உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments