திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மாண்புமிகு மாவட்ட அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், எம்எல்ஏ திருத்தணி சந்திரன் எம் எல் ஏ,பூந்தமல்லி கிருஷ்ணசாமி,எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி டி.ஜே. கோவிந்தராஜன், எம்எல்ஏ பொன்னேரி துரை சந்திரசேகர், காங்கிரஸ் எம்எல்ஏ முன்னிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் எஸ் ஐ ஆர் -ஐ நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பறிக்காதே பறிக்காதே வாக்குரிமையைபறிக்காதே, நீக்காதே நீக்காதே தமிழர்களின் வாக்குகளை நீக்காதே, நிறுத்து நிறுத்து எஸ் ஐ ஆர்- ஐ நிறுத்து கைவிடு கைவிடு எஸ் ஐ ஆர் கைவிடு பாஜகவே பாஜகவே புற வாசலில் நுழையாதே போன்ற ஆர்பாட்ட முழக்கங்களுடன் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மு. பகலவன் முன்னாள் எம்எல்ஏ சி.எச் சேகர் மாநில பொறுப்பாளர் வெ.அன்பு வாணனன், உமா மகேஸ்வரி,. வே. ஆனந்தகுமார் மற்றும் ஆரணி நகர செயலாளர் பி. முத்து முன்னாள் செயலாளர்கள் ஜி.பி.வெங்கடேசன் டி.கண்ணதாசன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எஸ்.ரோஸ் பொன்னையன் துணைச் செயலாளர் டி.கோபிநாத் பொருளாளர் கு.கரிகாலன் மற்றும் ஆரணி நகர பொறுப்பாளர்கள் சி. நீலகண்டன். எம். எம் சுல்தான் ஜே.மகேந்திரன் எல் உதயகுமார் சந்தோஷ் பிரபா மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



0 Comments