ஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திர சார்பில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்


ஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் ஈரோடு பப்ளிக்  சிபிஎஸ்இ பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 150கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெற்று ஆர்வமாக விளையாடினர். 

ஆண்கள் பிரிவில் வாலிபால் போட்டியில் ஈரோடு பப்ளிக்  சிபிஎஸ்இ பள்ளி முதல் இடத்தையும்,  மொடக்குறிச்சி போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவர்கள் இரண்டாம் இடத்தையும்  பெற்றன. பெண்கள் பிரிவில் கயிறு இழுத்தல் போட்டியில் ஈரோடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி  முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர், மை பாரத் ஒருங்கிணைப்பாளர்கள்  கோப்பைகள், மெடல்கல், வழங்கினர்.

 பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமது  வாழ்த்துக்களை தெரிவித்தார். வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.  சௌந்தர்யா,  இலக்கியா,  கலைச்செல்வன்,  ராஜ்குமார், ஷோபனா,  மற்றும் கதிரவன் ஆகியோருடன் இணைந்து பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் இந்த போட்டியினை மிகவும் சிறப்பாக நடத்தினர்.

செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட தொடர்பு கொள்ளவும் :- 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471,6382211592 .






Post a Comment

0 Comments