திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சி 12 வது வார்டு பாகம் 252 பக்ரி தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு (எஸ் ஐ ஆர்) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவத்தை பி எல் ஓ அலுவலர் லட்சுமி அவர்கள் வீடு தோறும் சென்று வழங்கினார்.
அப்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் கே. ரமேஷ் ராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆரணி நகர செயலாளர் பி. முத்து முன்னிலையில் மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளரும் இந்த வார்டின் வாக்காளருமான திரு எஸ்.ரோஸ் பொன்னையன் அவர்கள் வடிவத்தினை பெற்று,பூர்த்தி செய்து பி எல் ஓ அலுவலரிடம் வழங்கினார் இதில் நகரப் பொருளாளர் கு.கரிகாலன்,எம்.எம். சுல்தான், சந்தோஷ் பிரபா, டைலர் பழனி நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 Comments