மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 


ஒருங்கிணைந்த தி.மு.க.திருவள்ளூர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.அவர்கள் கண்டன உரை ஆற்றினார் இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ். சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி சந்திரன் திருவள்ளூர் வி.ஜி ராஜேந்திரன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி.சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கூட்டணிக் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு கண்டனை  கண்டன உரை ஆற்றினார்கள் .

இந்த ஆர்ப்பாட்டத்தில், கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருத்தணி திருவள்ளூர் ஆவடி பூந்தமல்லி தொகுதியை சேர்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக  நிர்வாகிகள் கூட்டணி கட்சி  சேர்ந்த காங்கிரஸ். விடுதலை சிறுத்தை. வலது கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட்.. முஸ்லிம் லீக். மக்கள் நீதி மையம். தமிழ் வாழ்வு உரிமைக் கட்சி. மனித நேயம் மக்கள் கட்சி மறுமலர்ச்சி திமுக..நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.



Post a Comment

0 Comments