திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட 10,11 12 ஆகிய வார்டுகளுக்கு ஆரணி மசூதி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து லட்சுமி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் சப்ளை செய்து வந்தனர் கடந்த 11.11.2025 அன்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தடைப்பட்டது உடைப்பை சரி செய்ய எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியாமல் பேரூராட்சி அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக திண்டாடி வந்தனர்.
மேற்படி வார்டுகளுக்கு உட்பட்ட எஸ். பி.கோயில் தெரு,தோட்டக்கார தெரு,முலிகி தெரு,கோமிட்டி பேட்டை பழைய வில்லியர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அல்லல்பட்டு வந்தனர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மன்ற பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தீவிர முயற்சியால் கடின முயற்சிக்குப் பின் இன்று மாலை உடைப்பு சரி செய்து மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


0 Comments