எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்ட பெண் பக்தர்..... ரூபாய் நோட்டுகள் கருகி நாசம்....

 


ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ளது வல்லப மகாசுவாமிகள் கோவில். இங்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு பெண் பக்தை செய்த செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கோவில் ஊழியர்கள் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென, சுவாமி உண்டியலில் இருந்து புகை வருவதை கவனித்தனர்.

உடனே உஷாரான அவர்கள் உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றினர். இதனால் நெருப்பு அணைந்து, உண்டியலில் இருந்த நோட்டுகள் நனைந்து போனது.பின்னர் உண்டியலை திறந்து பார்த்தபோது ஏராளமான ரூபாய் நோட்டுகள் முழுவதும் எரிந்து போயிருந்தன. பல நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டன. சில நோட்டுகள் உண்டியலில் ஊற்றிய தண்ணீரில் நனைந்திருந்தன.அதன் பின்னர் நனைந்த ரூபாய் நோட்டுகளை ஒரு துணியில் போட்டு காய வைத்தனர்.

 தலைமுடியை உலர்த்தும் ‘ஹேர் டிரையர்’ கருவி மூலம் சூடான காற்றை ரூபாய் நோட்டுகள் மீது விழச் செய்து அவற்றை உலர்த்தினர். பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பக்தை சூடமேற்றி அதை நேராக கொண்டு உண்டியலில் போடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து எரிந்து போன உண்டியல் பணத்தை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments