டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது.
1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது.
இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

0 Comments