ஆரம்பாக்கம் பள்ளிக்கு தாய் எல்லம்மாள் நினைவாக சொந்த நிதியிலிருந்து கலையரங்கம் அமைத்துக் கொடுத்த முன்னாள் தலைவர் கே.ஆறுமுகம்


ஆரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளிக்கு முன்னான் ஊராட்சி மன்ற தலைவர் கே. ஆறுமுகம் தனது சொந்த நிதியில் தன் தாய் நினைவாக கலையரங்கம் கட்டிடம் அமைத்துக் கொடுத்தார். இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  டி. ஜே கோவிந்தராஜன். திறந்து வைத்து பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கியும் ஏழைப் பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்டது ஆரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் அரசு உதவி பெறும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு கலையரங்க கட்டிடம் கட்டி தருமாறு முன்னான் ஊராட்சி மன்ற தலைவரும் எல்லம்மா சேவா சங்க நிறுவன தலைவரும் திமுக மீனவர் அணி நிர்வாகியுமான கே.ஆறுமுகம் அவர்களிடம் பள்ளியின் சார்பாக கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களது கோரிக்கையை ஏற்று ஆரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் எல்லம்மா சேவா சங்க நிறுவனத் தலைவகும் முன்னாள் திமுக மீனவர்களின் நிர்வாகியுமான கே.ஆறுமுகம் அவர்கள் தனது சொந்த நிதியான ரூ 4 லட்சத்தில் பள்ளிக்கு தனது தாயார்.எல்லம்மாள் கலையரங்கம் என்ற பெயரில் கலையரங்க கட்டிடத்தை கட்டிகொடுத்தார். 

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி ஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கினார். பின்னர் ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் மதிய உணவினை வழங்கினர்.

 இந்நிகழ்ச்சியில் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஏ.வி.ராமகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன் கா.சு.ஜெகதீசன்., கும்மிடிப்பூண்டி நகர திமுக பேரூர் கழக செயலாளர் அறிவழகள்,  கேசவன், மனோகர்.ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற செயலாளர் சோமன் பாபு, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சிக்கு ஆரம்பாக்கம் புனித மரியன்னை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் வி. மேரி ஜெசிந்தா, ஆரம்பாக்கம் ம புனித அன்னாள் பெண்கள் ஆ மேல்நிலைப்பள்ளி தலைமை அ ஆசிரியர் பாத்திமா ஆரம்பாக்கம் புனித வான தூதர்களின் அண்னை ஆலயத்தின் பங்கு தந்தை கிரீத் மேத்யூ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Post a Comment

0 Comments